பள்ளிக்கரணை, ஜூலை 8 சென்னை பள்ளிக்கரணை பஞ்சாயத்து அலுவலகம் அருகில், கடந்த 5.7.2025 அன்று சோழிங்கநல்லூர் மாவட்ட கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா இவ்விரண்டு விழாவையும் இணைத்து ஒருசேர நடைபெற்ற தெருமுனை பரப்புரைக் கூட்டமானது சிறப்போடும் எழுச்சி யோடும் முனைவர் தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட காப்பாளர் நீலாங்கரை இரா.தே. வீரபத்திரன், மாவட்ட அமைப்பாளர் இரா. இரத்தினசாமி, மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட. து. தலைவர் க. தமிழினியன், மாவட்ட மகளிரணி தலைவர் தேவி சக்திவேல், மாவட்ட ப.க. தலைவர் த. ஆனந்தன், மா. இ. அணித் தலைவர். மு. நித்தியானந்தம் வி. பன்னீர் செல்வம், மாநில ஒருங்கிணைப்பாளர். அ.தா. சண்முகசுந்தரம், மாநில ப.க. அமைப்பாளர். பி.சி.ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் ஜே.குமார், செயலாளர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம். ஏ.டி.அரசு, மாவட்ட ப.க. துணைத் தலைவர். வே.பா.அறி வன், வழக்குரைஞர், மாவட்ட இளைஞரணி ஆகியோர் முன்னிலை வகிக்க.
மாவட்ட செயலாளர் ஆ. விஜய் உத்த மன் ராஜ் வரவேற்புரையாற்ற, சிறப்பு அழைப்பா ளர்கள் சுமார் 20 பேருக்குப் பயனாடை அளித்து மகிழ்ந்தது மாவட்ட கழகம்.
கழகத்தின் மாநில பிரச்சாரச் செயலா ளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சுயமரியாதை இயக்கம் 100 ஆண்டுகளாக கடந்து வந்து கொண்டிருக்கும் பாதை செயல்திட்டங்கள், ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை மீட்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மேலும் சமூகநீதியை காப்பாற்றும் போராட்டங்கள், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் பேரன்போடும், போராட்ட குணத்தோடும், சகிப்புத்தன்மையோடும் கூடிய அணுகுமுறைகள், பெற்ற வெற்றிகள் குறித்தும், தந்தை பெரியார் மாநாடு களில் அளித்த பிரியாணி போன்ற சத்தான எளியமுறை உணவு, மற்றும் உடை கலாச்சாரத்தில் அய்யா பயன்படுத்திய லுங்கி அணிதல் போன்ற நிகழ்வுகளை தோழருக்கே உரித்தான சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவை உணர்வோடு பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்கும் கைத்தட்டல்களுக்கு மத்தியில் மிகச்சிறப் பான ஒரு உரையை நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளர்கள் வந்திருந்து உரை நிகழ்த்தியவர்கள் மு.பெ. தனக்கண்ணு. இ. க.பொ. (முதிர்நிலை உதவியாளர் மாநில பதி வுத்துறை தலைவர் அலுவலகம், சென்னை-28.) உ. திருவேங்கடம், 172 வது வட்ட து. செயலாளர் தி.மு.க. மக்கள் குடியரசு இயக்கத்தைச் சேர்ந்த தோழர் நெல்சன் மண்டேலா. தோழர் லாரன்ஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பள்ளிக்கரணை. சுரேஷ், DYFY, பள்ளிக்கரணை. டி.ஏ.வளன், பெரியார் உணர்வாளர் பள்ளிக்கரனை.
நேசம் முரளி, பெரியார் உணர்வாளர்கள், திரைப்பட இயக்குநர். பூ.சீனிவாசன், செம்பாக்கம். ஜெ. போஸ்கோ, பள்ளிக்கரணை மூதேவி தையலகம் ஏதுசாமி, மேலும், திராவிட முன்னேற்ற கழகம். இந்திய காங்கிரஸ் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. விடுதலை சிறுத்தைகள் கட்சி. மனிதநேய மக்கள் கட்சி. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம். தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் அனைத்து தோழமை கட்சிகள். சமூக இயக்கங்கள் பங்கேற்றனர்.
கலந்துகொண்ட மாவட்ட கழக தோழர்கள் வெ. மணிகண்டன், மா. அமைப்பாளர் தொழிலாளர் அணி வெற்றி வீரன், மேடவாக்கம் வே.ராதா பாண்டு, மகளிரணி மடிப்பாக்கம். சரவணக்குமார், கீழ்கட்டளை இந்திரா பிரகாஷ், மடிப்பாக்கம் நா. குணசேகரன், நூத்தஞ்சேரி அரங்க. ராஜா, மேடவாக்கம் எம்.ராஜு, தரமணி ஆர். சதீஷ்குமார், ஆதம்பாக்கம்.
தென் சென்னை தோழர் தாமோதரன் சிறப்பான முறையில் காணொலியைப் பதிவு செய்தார் அவருக்கு மேடையில் மாநில பிரச்சார செயலாளர் பயனாடை அளித்து சிறப்பு செய்யப்பட்டது.
நிறைவாக மேடவாக்கம் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திவாகரன் நன்றியுரையாற்ற எழுச்சியுடன் நடந்து முடிந்தது.