‘பணக்காரர்களை மேலும் மேலும் பணக்காரர்களாக்கும் மோடி அரசு!’ ராகுல்காந்தி கடும் தாக்கு

2 Min Read

புதுடில்லி, ஜூலை 8 ‘எஃப் அண்ட் ஓ’ பங்குச்சந்தையில் பெரிய நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் குறித்து அமைதி காக்கும் மோடி அரசு, பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கி வரு வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி றே்று விமா்சித்தாா்.

இத்தகைய முறைகேடுகளின் மூலம், சாதாரண சில்லறை முதலீட்டாளர்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படுவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட ‘எக்ஸ்‘ பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

‘‘‘எஃப் அண்ட் ஓ’ (ஊக பேரம்) பங்குச்சந்தையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கடந்த ஆண்டிலேயே நான் கூறியிருந்தேன். இந்தச் சந்தை பெரிய நிறுவ னங்களின் களமாகிவிட்டது. அவா்களின் முறைகேடுகளால் சிறிய முதலீட்டாளர்களின் பணம் தொடர்ந்து சுரண்டப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட், ‘எஃப் அண்ட் ஓ’ சந்தையில் ஆயிரக்கணக்கான கோடிகளை முறைகேடாக கையாண்டதாக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. செபி ஏன் இவ்வளவு காலம் அமைதி காத்தது?  மேலும் எத்தனை நிறுவ னங்கள் சந்தையில் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டு வரு கின்றன என்று சந்தேகம் எழுகிறது.

இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும் யாருடைய உத்தரவின்பேரில், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இவ்விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது? மோடி அரசு பணக்காரா்களை மேலும் பணக்காரர்களாக்கி, சாதாரண முதலீட்டாளா்களை அழிவின் விளிம்புக்குத் தள்ளு கிறது. ஒவ்வொரு முறையும் இது தெளிவாக நிரூபணமாகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

செபி கடந்த 4.7.2025 அன்று வெளியிட்ட அறிக்கையில், ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்துக்கு சந்தையில் இருந்து தடை விதித்ததோடு, அந்நிறுவனம் முறைகேடாக ஈட்டிய ரூ.4,843 கோடிக்கும் அதிக மான லாபத்தைப் பறிமுதல் செய்துள்ளது.

2023, ஜனவரி முதல் கடந்த மே வரையிலான விசாரணை காலகட்டத்தில் ஜேன் ஸ்ட்ரீட் நிகர அடிப்படையில் ரூ.36,671 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக செபி கண்டறிந்துள்ளது குறிப் பிடத்தக்கது.

இதுதொடா்பாக செபி தலைவா் துஹின்காந்த பாண்டே நேற்று (7.7.2025) கூறுகையில், ‘ஜேன் ஸ்ட்ரீட் போன்று வேறு எந்த நிறுவனமும் முறைகேட்டில் ஈடுபட்டதாக இதுவரை கண்டறி யப்படவில்லை’ என்றார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *