சென்னை, ஜூலை 8 நாட்டிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பெரும் பெரு நிறுவனங்கள் ஆர்வத்துடன் உள்ளன. தொழில் தொடங்க விருப்பப்பட்டியலில் குஜராத், மராட்டிய மாநிலங்கள் பட்டியலில் 2 மற்றும் 3 ஆவது இடங்களில் உள்ளன உலகளவில் தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை தேர்வு செய்கின்றனர். ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தொழில் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.