கட்சி நிர்வாகிகளை கைபேசியில் தொடர்பு கொண்டால் சிலர் மதிப்பதில்லை; ஒரு வணக்கம் கூட சொல்வதில்லை என நயினார் நாகேந்திரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக தலைவரான பிறகும் கட்சியில் அவருக்கு உரிய மரியாதை இல்லை என பேசப்படும் நிலையில், நயினாரின் பேச்சு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலைவர் பதவியில் இருந்து விலகி, அரியணையை அண்ணாமலைக்கு கொடுங்கள் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
சீன அதிபர்
ஜி ஜின் பிங் ஓய்வு?
சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தனது அதிகாரங்களை பிரித்து கொடுக்க தொடங்கியுள்ளாராம். இதனால் அவர் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் உள்ளன. இந்தியா தவிர அனைத்து பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார உறவை கொண்டிருக்கும் சீனா, பிரிக்ஸ் கரன்சியை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளது. இப்படியான சூழலில் அவர் ஓய்வு பெற உள்ளதாக வரும் தகவல்கள் அதன் நட்பு நாடுகளிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது