டெக்ஸாஸ், ஜூலை 7- டெக்சாஸின் தெற்கு-மத்திய மாகாணத்தில் கடுமையான மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கூடிய புயலும் வீசி வருகிறது.
குவாடலூப் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் நகரங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் முழுவதும் சுமார் 82 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேரைக் காணவில்லை. கெர் கவுண்டியில் உள்ள “கேம்ப் மிஸ்டிக்” என்ற கோடைக்கால முகாமில் 10 சிறுமிகள் காணாமல் போய்விட்டனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை 850க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.