பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து டாக்டர் அன்புமணி நீக்கமாம்!

1 Min Read

சென்னை, ஜூலை 7– பாமக தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்கள் மாற்றப் பட்டுள்ளதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரி வித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சி தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 3 மாதங்களாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்த ராமதாஸ், தலைவர் பதவியில் தான் தொடர்வதாக தெரிவித்தார். ஆனால், தன்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு இல்லை என்று அன்புமணி கூறிவருகிறார். இதற்கிடையே, கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், அவர் களுக்கு அன்புமணி பதவி வழங்குவதும் தொடர் கதையாக இருந்து இருந்து வருகிறது. இந்நிலையில், தைலாபுரத்தில் நேற்று முன்தினம் பாமக தலைமை நிர்வாக குழுவை கூட்டினார் ராமதாஸ். இக்குழுவில் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி, தீரன் உள்ளிட்ட 19 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த கூட்டத் தில் அன்புமணி, வடி வேல் ராவணன், திலக பாமா, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்க வில்லை.

இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் மாற்றியமைக்கப்பட்டு 21 பேர் கொண்ட குழுவாக செயல்படும் என அறிவித்தார். மாற்றிய மைக்கப்பட்ட புதிய குழுவில் ராமதாஸ், ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள், பு.தா.அருள்மொழி, தீரன் உள்ளிட்ட 21 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் அன்புமணி பெயர் இல்லை.

இதுகுறித்து தைலாபுரத்தில் பாமக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, “பாமக தலைமை நிர்வாக குழு திருத்தி அமைக் கப்பட்டுள்ளது. அதில் இருந்து அன்புமணி உள்ளிட்ட சிலர் நீக்கப் பட்டுள்ளனர்” என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *