எழுத்துப் பணிக்கு செயற்கை நுண்ணறிவை மட்டுமே சார்ந்திருப்பது மூளையின் திறனை மந்தமாக்கும் ஆய்வறிக்கை எச்சரிக்கை

viduthalai
2 Min Read

மாசாசூசெட்ஸ், ஜூலை 6– சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாயிட் போன்ற செயற்கை நுண்ணறிவுகளை மட்டுமே முழுமையாக நம்பி வேலை செய்யும் நபர்களது மூளையின் செயல் திறன் மந்தமாகும் என மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (எம்அய்டி) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆய்வறிக்கை

எம்அய்டி வெளியிட்டுள்ள அந்த ஆய்வறிக்கையில் கட்டுரை எழுது வது, அதனை மேம்படுத்துவது, மின் னஞ்சல் எழுதுவது  போன்ற அன்றாட எழுத்துப் பணிகளை முடிக்க செயற்கை நுண்ணறிவுகளை பயன் படுத்தும் போது அவை ஒரு நபரின் சொந்தமான எழுத்து நடையை மாற்று வதுடன் அவரது மூளையின் செயல் திறனையும், சிந்திக்கும் திறனையும் எதிர்மறையாக மாற்றுகிறது. அதாவது மூளையின் சுயமான சிந்திக்கும் திறனை மட்டுப்படுத்தி மந்தமாக்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

படைப்பாற்றல் குறைபாடு

இந்த ஆய்வில் பங்கெடுத்த நபர்களில் சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுகளை மட்டும் நம்பி இருந்தவர்கள் குறைவான மூளைச் செயல்பாடு கொண்ட வர்களாகவும், குறைவான படைப் பாற்றல் திறன் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.

மேலும் அவர்கள் என்ன எழுதினார்களோ அதை மீண்டும் நினைவில் கொண்டு வந்து சொல்ல முடியாமல் இருந்துள்ளனர்.

உயிர்ப்பு இல்லாமல்…

இஇஜி சென்சார்களைப் பயன் படுத்தி மூளைச் செயல்பாட்டைக் கண்காணித்து எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் சாட்ஜிபிடி பயன்படுத்தும் நபர்கள், கூகுளில் தேடுபவர்கள், எந்த இணையக் கருவியையும் பயன் படுத்தாதவர்கள் என மூன்று பிரிவுகளில் மொத்தம் 54 நபர்கள் பங்கேற்றுள்ளனர்.

தங்கள் மூளையை மட்டுமே பயன்படுத்திய எழுத்தாளர்கள் மிக அதிக அளவிலான நினைவாற்றல், படைப்பாற்றல் மற்றும் ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் எழுதிய கட்டுரைகள் தனித்துவமான வையாகவும், சிந்திக்கத் தூண்டும் வகையிலும் உயிரோட்டத்துடனும் இருந்துள்ளது.

ஆனால் சாட்- ஜிபிடி யைப் பயன்படுத்திய அனைவரின் எழுத்துக்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவும், ஒருவரைப்பார்த்து மற்றொருவர் நகலெடுத்ததைப் போலவும் இருந்துள்ளது.  இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் கட்டுரைகளை படித்து மதிப்பாய்வு செய்த ஆங்கில ஆசிரியர்கள் சாட்ஜி பிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எழுதிய வர்களின் எழுத்துக்களை “உயிர்ப்பு இல்லாமல் உள்ளது” என்றே குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக விமர்சன ரீதியிலான சிந்தனை மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடைய ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவை மட்டுமே நம்பியுள்ள வர்கள் மோசமான முறையில் பின்தங்கி யுள்ளனர். ஆய்வின் முடிவில் அவர்களின் ஈடுபாடு மேலும் குறைந்து இறுதி எழுத்து அமர்வுகளில் தங்கள் சொந்த சிந்தனை இல்லாமல் சாட் ஜிபிடி எழுதித்தரும் கட்டுரையை அப்படியே எடுத்துக் கொடுத்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு இல்லாமல் எழுதியவர்களை, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அனுமதித்த போதும் அவர்கள் மூளையின் சொந்தத் திறனையே அதிகமாக பயன்படுத்தி யுள்ளனர். இதே நேரத்தில் செயற்கை  நுண்ணறிவை மட்டும் நம்பி இருந்த வர்களால் அது இல்லாமல் போதிய ஈடுபாட்டுடன் எழுத முடியவில்லை.

இதனால் இந்த அறிக்கையில் செயற்கை நுண்ணறிவை மட்டுமே முழுமையாக நம்பி உள்ளவர் களிடையே முக்கியமான அறி வாற்றல் திறன்கள் அரிக்கப்படும் ஆபத்து உள்ளது என எச்சரிக்கப் பட்டுள்ளது. அதே நேரம் செயற்கை நுண்ணறிவுகளை மட்டுமே முழுமை யாகச் சார்ந்து இருக்காமல் மனித மூளையின் சிந்தனைகளை அதனிடம் வேலை யாக கொடுக்க வேண்டும்.

அதுவே நமது சிந்திக்கும் திறனை அதிகரிப்பதுடன், செயற்கை நுண்ணறிவை சரியாக பயன்படுத்தும் முறையாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *