காசா,நவ.12- காசாவில் உள்ள பாலஸ்தீனக் குடி மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் வியாழக்கிழமை முதல் தினமும் நான்கு மணிநேரம் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் ஒப்புக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி முதல் எந்த ஒரு இடைவெளியும் இன்றி காசா மீது இஸ்ரேல் ராணுவம் குரூரமான தாக்குதலை நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில் 4 ஆயிரத்திற்கும் மேலான குழந்தைகள் உட்பட 10,800 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மனிதாபிமான அடைப்படையில் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் அய்.நா. பொதுச்செயலாளர் ஆகியோர் தொடர் கண்டனங்களையும் கோரிக்கைகளையும் எழுப்பி வந்தனர்.
இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசா பகுதியில் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் ஏற்கெனவே 4 லட்சத்திற்கும் அதி கமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தற்போது அப்பகுதியில் உணவு, தண்ணீர் முழுவதுமாக தீர்ந்து மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே அங்கிருந்து தெற்கு பகுதியை நோக்கி மக்கள் மீண்டும் வெளியேறத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாலஸ்தீனர்கள் வெளியேற அனு மதிக்கும் வகையில் 9.11.2023 முதல் தினமும் 4 மணி நேரம் போர் இடைநிறுத்தம் செய்யப்படும் என் றும் இதற்கு இஸ்ரேல் அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றும் வெள்ளை மாளிகை தெரிவித் துள்ளது.
எனினும் வெள்ளை மாளிகை அறிவித்த நான்கு மணிநேர இடைநிறுத்தம் பற்றி குறிப்பிடாமல் நாங்கள் முன்பிருந்தே பல மணிநேரம் போர் இடை நிறுத்தத்தை பின்பற்றி வருகிறோம் என இஸ்ரேல் பிரதமர் அலு வலகம் தெரிவித்துள்ளது.