பீகாரில் வாக்காளர் பட்டியல் : தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு

1 Min Read

புதுடில்லி, ஜூலை 6 பீகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தர விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில், ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கம்

முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் அய்க்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில், அக்., – நவம் பரில் சட்டசபை தேர்தல் நடக்க வுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்படி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஒவ் வொரு வாக்காளரின் ஓட்டுரிமையை உறுதி செய்யவும், பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உருவாக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், பீகாரில் வாக் காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுசாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், ‘தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு அரசமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் – 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகளை மீறுகிறது. மேலும் இந்த உத்தரவு தன்னிச்சையானது. பல லட்சம் வாக்காளர்களின் ஓட்டுரிமையை இது பறிக்கக் கூடும். இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர வுள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *