அதிர்ச்சித் தகவல்கள்!
நாக்பூர், ஜூலை 5 ‘‘நான் ஆட்சிக்கு வந்தால் 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன்’’ என்று கூறிய மோடியின் சாதனை மகாராட்டிராவின் விதர்பா (மத்திய கிழக்கு மாவட்டம்) மாவட்டத்தில் மட்டும் மூன்று மாதங்களில் 767 பேர் தற்கொலை; அதாவது ஒரு நாளைக்கு 9 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்
மகாராட்டிராவில் ஜனவரி முதல் மார்ச் 2025 வரையிலான மூன்று மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள னர் என்று மாநில அரசு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது. விவசாயக் கடன்அரசின் நலத்திட்டம் சரியான நேரத்தில் கிடைக்காமை, மற்றும் தனியார் உரம் மற்று விதைகள் தரமற்று இருப்பதால் விளைச்சல் , விளைச்சல் பாதிப்பு, போன்றவை காரணமாக உள்ளதாக அரசு கூறியுள்ளது.
அதிகரிக்கும் தற்கொலைகள்
மகாராட்டிராவில் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 767 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இது ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு சமம்.
விதர்பா மற்றும் மராத்வாடா
விதர்பா பகுதி, குறிப்பாக யவத்மால், அமரா வதி, அகோலா, புல்தானா மற்றும் வாஷிம் போன்ற மாவட்டங்கள் அதிக அளவில் விவசா யிகள் தற்கொலை செய்துள்ளனர். இங்கு மட்டும் 257 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. மராத்வாடா பகுதியிலும் 269 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 65 அதிகம். பீட் மாவட்டத்தில் மிக அதிகமான தற்கொலைகள் (71) பதிவாகியுள்ளன.
தற்கொலை செய்து கொண்ட 767 விவசாயி களில், 373 குடும்பங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 200 விவசாயிகள் தற்கொலைக்கான காரணத்திற்கான சான்றுகளை சமர்ப்பிக்காததால் உதவி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் 194 வழக்குகள் விசாரணையில் உள்ளன.
உர நிறுவனங்களின் மோசடி
குறிப்பாக வணிகப்பயிரான கடலை, பருத்தி, எள், மற்றும் தாணியப் பயிரான மக்காச்சோளம், காய்கறிகளில் வெண்டை, தக்காளி, பயறு வகைகளாக கொண்டக்கடலை, துவரை உள்ளிட்ட பயிர்கள் அதிகம் பயிரிடப்படுகிறது. இதற்கான விதைகளை தனியாரிடமிருந்து வாங்க நிர்பந்திக்கப்படுவதாலும் அதற்கான சில சலுகைகள் வழங்கப்படுவதாலும் வேறு வழியின்றி விவசாயிகள் தனியார் நிறுவனத்தின் விதை மற்றும் உரங்களை வாங்குகின்றனர்.
ஆனால் தனியார் விதைகள் சரிவர பலன்கொடுக்காமல் அதற்கு உரங்களும் அதிகம் தேவைப்படுவதால் தொடர்ந்து உரங்கள் வாங்கிய நிலையில் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காதது, உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பது, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) கிடைக்காதது போன்றவை விவசாயிகளை கடனில் தள்ளுகின்றன.
கடன் சுமை
வங்கிகள் தங்கம் மற்றும் நிலப்பத்திரங்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கிறது. மேலும் ஏற்கெனவே கடன் வாங்கி அதைக் கட்டியபோதிலும் சிபிஎல் கிரிடிட் சரிவரை காட்டாததால் கடன்கள் கொடுக்க வங்கிகள் மறுத்துவிடவே கந்து வட்டிக்கு கடன்வாங்கி பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கின்றனர் அரசு எந்த ஒரு உதவியும் செய்ய முன்வராததால் விவசாயிகளின் கடன் சுமையை அதிகரிக்கின்றன.
பயிர் இழப்பு, கடன் சுமை, ஆகியவை விவ சாயிகளிடையே மன அழுத்தத்தை அதிகரித்து தற்கொலை செய்துகொள்கின்றனர்..
விவசாயத் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு அரசு விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் நிதி உதவி வழங்கத் தவறியதே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் மற்றும் விரிவான கடன் தள்ளுபடி போன்ற நீண்டகால கோரிக்கைகளை அரசு புறக்கணிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. ஆனால் இந்த விவரம் எதுவுமே தொடர்ந்து 30 ஆண்டுகளாக அங்கு ஆளும் பாஜக அரசு நாளிதழ்களில் கூட செய்தி வராமல் பார்த்துக்கொள்கிறது.