இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், சிறந்த சிந்தனையாளரும், மிக்க பண்பின் குடியிருப்பாக வாழும் பேராசிரியர்
கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர் விருது’ அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க அறிவிப்பாகும்.
தக்காரை தக்க நேரத்தில் அடையாளம் கண்டு பாராட்டி ஊக்குவப்படுத்துவதில் நமது மாண்புமிகு மானமிகு முதலமைச்சருக்கு ஒப்பாரில்லை!
விருதாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
5.7.2025