பெரியார் பெருந்தொண்டர், பெரம்பை கு.உலகநாதன் மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை

1 Min Read

புதுச்சேரி, ஜூலை 5- பெரியார் பெருந்தொண்டர், புதுச்சேரித் திராவிடர் கழக மூத்த முன்னோடியாக விளங்கியவர் பெரம்பை கு.உலகநாதன் 3.7.2025 அன்று காலை 9.55 மணியளவில், தன்னுடைய 75ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.

3.7.2025 அன்று மாலை 4.30 மணியளவில், மறைந்த சுயமரி யாதைச் சுடரொளிக்கு புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் மாவட் டத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் வில்லியனூர் எம்.ஜி.ஆர் சிலை அருகிலிருந்து கழகத் தோழர்கள் ஊர்வலமாகச் சென்று அவர்களின் உடலுக்கு கழகக் கொடியைப் போர்த்தி, மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்ட கழகச் செயலாளர் தி. இராசா, மாவட்டக் காப்பாளர் இர.இராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் கி. அறிவழகன், லோ. பழனி, விலாசினிராசு, துணைத் தலைவர் மு. குப்புசாமி, கழகத் தொழி லாளரணித் தலைவர் வீர. இளங் கோவன், செயலாளர் கே. குமார், கழக மகளிரணித் தலைவர் எழிலரசி அறிவழகன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ. சிவராசன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ. நடராசன், செயலாளர் பா.குமரன், தெ.தியாகு, நகராட்சி & கொம்யூன் பொறுப்பாளர்கள் களஞ்சியம் வெங்கடேசன், செ. இளங்கோவன், இரா. ஆதிநாராயணன், ஊடகவியலாளர் பெ. ஆதிநாராயணன், முகமது நிஜாம், புதுவைத் தமிழ் நெஞ்சன், திருச்சி இரா.திருநாவுக்கரசு, துரை.இராமசாமி, வில்லியனூர் இரா.கலைமணி, விழுப்புரம் கழக மாவட்டத் தலைவர் இராஜேந்திரன், நகரத் தலைவர் சதீஷ், மாவட்ட அமைப்பாளர் அரங்க. பரணிதரன், மக்கள் அதிகாரம் அரசு, பெரியார் சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் தீனா, கடலூர் தோழர் சிவக்குமார், பார்த்தசாரதி, சு.மணிபாரதி, இரா.காந்திமதி மற்றும் சமூக, அரசியல் இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *