உத்தரப்பிரதேச மாநிலம் பதாயுவைச் சேர்ந்த ஹனிஃப் என்பவர், தங்கள் கிராமத்தில் ஹிந்துக்களுக்குக் கோவில் இல்லை என்பதால், தனக்குச் சொந்தமான நிலத்தை கோவில் கட்டுவதற்காக வழங்கியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோவிலின் பராமரிப்புப் பணிகளையும் ஹனிஃப் மேற்கொண்டு வந்துள்ளார்.
கோவிலின் ஓர் ஓரத்தில் நீண்ட காலமாக ஹனிஃப் தொழுது வந்துள்ளார். இந்த நிலையில், அண்மையில் அந்தக் கிராமத்திற்கு வந்த சில ஹிந்து அமைப்பினர். ஹனிஃப் தொழுகை நடத்துவதைப் படம்பிடித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறை அதிகாரிகள் ஹனிஃப் மீது பி.என்.எஸ். 298 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். பிற மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் பொது இடத்தில் அவமரியாதையாக நடந்துகொள்ளுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.