அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து முதன்முதலாக பெண் குழந்தை ஒன்று பள்ளி செல்கிறது.
இதற்கான அவரது பெற்றோர் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக சுக்வீந்தர் சிங் மட்டு கூறும் போது, “எங்கள் வீட்டில் இதுவரை பெண் குழந்தைகள் யாரும் படிக்கவில்லை. வீட்டுவேலை, மாட்டை கவனிப்பது விவசாய வேலைகளுக்கு உதவிசெய்வது என்றே இருந்துவிட்டனர். எனது மகள் இந்த சக்கரத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம்;
அவள் படித்து நகரத்திற்குச் சென்று அதிகாரியாக வேண்டும். மேலும் இங்கு பல வீடுகளில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. அவர்களையும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்த எனது மகள் முதல் நாள் அன்று பள்ளி செல்லும் போது பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்றேன்” என்று கூறினார்