அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனி நபர்களின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கத் தேவையில்லை உச்சநீதிமன்றம் கருத்து

1 Min Read

புதுடெல்லி ஜூலை 04  அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத் தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கார் விபத்தில் உயிரிழிப்பு

கருநாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவிஷா கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி அதை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். இதையடுத்து ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி கரு நாடக உயர் நீதிமன்றத்தில் ரவிஷா மனைவி மற்றும் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன் றம், ரவிஷா காரை அதிவேகமாகவும் கவனக் குறைவாகவும் ஓட்டிய தாலேயே விபத்து நடந் துள்ளது. எனவே, இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இழப்பீடு வழங்க தேவையில்லை

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் ரவிஷா குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகி யோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையில், ரவிஷா அதிவேகமாக காரை ஓட்டியது உறுதிப் படுத்தப்பட்டது. இத யடுத்து ரவிஷா குடும் பத்தினரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் ஓட்டுநர் களின் குடும்பத்தினருக்கு காப் பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண் டியதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *