சென்னை, ஜூலை 4- இந்தியாவின் பின்தங்கிய மக்கள் தொகையில் காப்பீட்டு அணுகலையும், நிதிப் பாதுகாப்பையும் அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்க இந்தியாவின் மிகப்பெரிய சிறு நிதி வங்கியாகிய ஏ.யூ. ஸ்மால் பைனான்ஸ் பேங்க், நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகிய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் ஒரு உத்திசார் கூட்டாண் மையை அறிவித்துள்ளது.
இந்த கூட்டாண்மை யின் கீழ், ஏயூ எஸ்.எஃப்.பி., காலக் காப்பீடு, எண் டோவ்மென்ட் பிளான்கள், முழு ஆயுள் பாலிசிகள், ஓய்வூதியம், வருடாந்திர புராடக்டுக்கள், பரந்த அளவிலான பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் குழந்தை சார்ந்த திட்டங்கள் உள்ளிட்ட எல்.அய்.சி.யின் விரிவான ஆயுள் காப்பீட்டுத் தீர்வுகளை வழங்கும். இந்தச் சலுகைகள் 21 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிர தேசங்களில் உள்ள ஏ.யூ. ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் 2,456+ வங்கி வாடிக்கையாளர் தொடர்பு மய்யங்களில் கிடைக்கும், இது எல்.அய்.சி.-இன் சேவைகளை கிராமப்புற மற்றும் பாதியளவு நகர்ப்புறப் பகுதிகளில் கணிசமாக விரிவுபடுத்துகிறது என ஏ.யூ. ஸ்மால் ஃபை னான்ஸ் பேங்க்கின் மேலாண் இயக்குநர் உத்தம் திப்ரேவால் தெரிவித்துள்ளார்.