இது நதியோ அல்லது ஓடையோ அல்ல; மும்பை நாக்பூர் தேசிய நெடுஞ்சாலைதான். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் சொந்த தொகுதிக்குள் வருகிறது, ரூ.55 ஆயிரம் கோடி செலவில் போடப்பட்ட இந்த சாலை மே மாதம் இறுதியில் திறக்கப்பட்டது. ஆனால், சாலை முற்றிலும் சீர்கெட்டு, சிறு மழை பொழிந்தால்கூட, தண்ணீர் ஆறாக ஓடுகிறது.
மோடி அரசு கொண்டுவந்த ‘பாரத்மாலா’ என்ற துறைமுகம் மற்றும் பெருநகரங்களை இணைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.80 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட அமிர்தசரஸ்- ஜாம்நகர் போர்பந்தர் நெடுஞ்சாலை. இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்து 4 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால், இப்பொழுது சாலையே காணவில்லை. குண்டும், குழியுமாக இருக்கிறது.