ருத்ரபிரயாக், ஜூலை 4 உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள , கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொட ரில் கடல் மட்டத்திலிருந்து 3983 மீட்டர் உயரத்தில் சிவன் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு பக்தர்கள் யாத்தி ரையாக செல்வார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் (2.7.2025) கனமழை பெய்தது. இதனால் சோன்பிரயாக் அருகேயுள்ள முங்காட்டியா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேதார்நாத் யாத்திரையை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
கவுரிகுந்த் பகுதியிலிருந்து திரும்பிய சில பக்தர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கினர். அவர்களை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு சோன்பிரயாக் அழைத்து வந்தனர்.