கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு தாராவிளை பகுதியைச் சேர்ந்த தக்கலை ஒன்றிய கழக தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற பெரியார் பெருந்தொண்டர்
இரா.இராசீவ்லால் (வயது 75) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவருக்கு குமரி மாவட்ட கழக சார்பாக தோழர்கள் வீரவணக்கம் செலுத்தி, அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.