புதுடில்லி,நவ.12- நாடு முழுவதிலும் ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனப் பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவிக்க, பீகார் முதலமைச்சரும் அய்க்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் தனது மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகு பல மாநி லங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் பீகார் சட்டமன்றத்தில் ஜாதிவாரி கணக் கெடுப்பின் இறுதி அறிக்கை சமர்ப்பிக் கப்பட்டது. இதன் அடிப்படையில் பீகாரில் இடஒதுக்கீடு அளவை 50 விழுக்காட்டிலிருந்து 65 விழுக்காடாக முதலமைச்சர் நிதிஷ்குமார் உயர்த்தி யுள்ளார். இதற்கான மசோதா மாநில சட்டமன்றத்தில் 9.11.2023 அன்று நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, எஸ்.சி. பிரிவினருக்கு 20%, பழங்குடிகளுக்கு 2%, இதர பிற் படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத் தப்பட்டோருக்கு 43% இடஒதுக்கீடு கிடைக்கும். இத்துடன் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவின ருக்கு 10% இடங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன. இந்த மசோதாவுக்குப் பீகார் ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு நாடாளுமன்றமும் சட்டப்பூர்வ அனு மதி அளிக்க வேண்டும். எனவே இதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் தவிர 65 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமலாக்க முடியாது.
எனவே, பீகாரின் இடஒதுக்கீட்டு உயர்வுக்கு ஒன்றிய அரசின் அனுமதி கிடைப்பது கேள்விக்குறியே. இதன் மூலம் இந்த இடஒதுக்கீட்டுக்குப் பிர தமர் நரேந்திர மோடி அரசு தடையாக இருப்பதாக வரும் மக்களவைத் தேர் தலில் அரசியல் செய்ய முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.
அதே சமயம், நாடு முழுவதிலும் பொருளாதார ரீதியான கணக்கெ டுப்பை நடத்த ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் பிரதமர் மோடி தலை மையில் 9.11.2023 அன்று நடைபெற்றது. எனவே வரும் மக்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணியும் எதிர்க்கட்சிகளின் “இண்டியா” கூட்டணியும் இடஒதுக்கீடு அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என தெரிகிறது.
தற்போது 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு அளிக்க முடியாத நிலை உள்ளது. எனினும் தமிழ்நாடு மட்டுமே ஒரே மாநிலமாக கடந்த 1982ஆம் ஆண்டு முதல் அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சி யில் இருந்து 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறது. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு இதற்கு தடையானபோது, மேனாள் முதலமைச் சர் ஜெயலலிதா அதை எதிர்த்துப் போராடினார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களு டன் டில்லி சென்று, ஒன்றிய அரசின் ஒப்புதலை பெற்று 69 விழுக்காட்டை சட்டமாக்கி உறுதிப்படுத்தினார். இதன் பிறகு தமிழ்நாட்டைப் போல், ஜார்க் கண்ட், சத்தீஸ்கர் உள் ளிட்ட சில மாநி லங்களும் இட ஒதுக்கீட்டை உயர்த்த முயன்றன. எனினும், அவற்றின் முயற்சி வெற்றி பெறவில்லை. மகாராட்டிராவுக்கு பிறகு கர்நாடகாவும் இடஒதுக்கீட்டை 50 விழுக்காட்டிற்கு மேல் உயர்த்தியது. எனினும், அந்த உயர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.