பி.ஜே.பி. மதவெறிக்கு அளவே இல்லையா? உத்தரப்பிரதேசத்தில் காவடி யாத்திரை பாதையில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடைகள் அமைக்கத் தடை! ஊழியர்களின் ஆடையை அவிழ்த்து சோதித்த கேவலம்!

viduthalai
2 Min Read

லக்னோ, ஜூலை 3 உத்தரப்பிரதேசத்தில் காவடி யாத்திரைப் பாதையில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில், கடையில் உள்ள ஊழியர்களின் ஆடையை அவிழ்த்த அவலமும் நடந்துள்ளது.

யாத்திரை

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பி.ஜே.பி. அரசின் மதவெறிக்குச் சான்றாக நடந்துள்ள இந்த நிகழ்வுபற்றிய விவரம் வருமாறு:

வட மாநிலங்களில் ஜூலை 11 ஆம் தேதிமுதல் ‘ஸரவண’ மாதம் தொடங்குகிறது. அன்று முதல் ஜூலை 24 ஆம் தேதிவரை 13 நாள்களுக்கு சிவ பக்தர்கள், சிவன் கோவில்களுக்குக் காவடி எடுத்து, பாத யாத்திரையாகச் செல்வது வழக்கமாம். அந்தப் பாதை யில் கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஹிந்துக்கள் அல்லாதவர்கள் அங்கே கடைகளை அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு கடைகள் அமைத்திருப்பவர்கள், கடைக்கு முன்னதாக உரிமையாளரின் பெயர், கைபேசி எண் போன்ற விவரங்களை எழுதி வைக்கவேண்டும் என்றும், பக்தர்கள் யாத்திரைச் செல்லும் பாதை யில் இறைச்சிக் கடைகள் வைக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்து முதலமைச்சர் ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முசாபர் நகரில் ‘யோகா சாதனா’ என்ற ஆசிரமத்தை யஷ்வீர் மகராஜ் என்ற துறவி நடத்தி வருகிறார். காவடி யாத்திரை செல்லும் பாதைகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று அவர் ஏற்கெனவே அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஊழியரின் ஆடையை அவிழ்த்து சோதனை

கடந்த 2 நாள்​களுக்கு முன்​ டில்லி – டேராடூன் நெடுஞ்​சாலை​யில் உள்ள பண்​டிட் வைஷ்னோவ் தாபா​வில் யோகா சாத​னா​வை சேர்ந்த சீடர்கள் சோதனை நடத்​தினர். ஆதார் அட்​டை​யின்​படி ஒரு கடை​யின் உரிமை​யாளர் பெயர் முஸ்​லிம் என்று தெரிய வந்​துள்​ளது. அதன்​பின்​னர் ஊழியர்​களின் கீழாடையை அவிழ்த்து சீடர்​கள் பார்த்​துள்​ளனர்.

இதுதொடர்​பான காட்சிப் பதிவு சமூக வலை​தளங்​களில் வைரலானது. இதையடுத்து யஷ்வீர் மகராஜின் 6 சீடர்​களிடம் விளக்​கம் கேட்டு முசாபர்​நகர் புது​மண்டி காவல்துறையினர் தாக்கீது அனுப்பியுள்​ளனர்.

இதுகுறித்து யஷ்வீர் மகராஜ் வெளி யிட்​டுள்ள அறிக்​கை​யில், ‘‘காவல்துறை யினரின் தாக்கீதுக்கு சீடர்கள் விளக்​கம் அளிப்​பார்​கள். அவர்​கள் மீது வழக்கு தொடுக்க முயன்​றால், கடுமை​யாக எதிர்ப்போம். காவடி சுமக்​கும் பக்​தர்​கள் வாங்​கும் உணவில் எச்​சில் துப்​பிய​தால்​தான் இந்த நடவடிக்கை. காவல்துறையி னரின் தாக்கீதுக்கு  அஞ்ச மாட்​டோம்’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

இஸ்​லாமிய போதனையாளர் நபிகள் பற்றி 2015 ஆம் ஆண்டு விமர்​சனம் செய்​த​தால் யஷ்வீர் பிரபல​மா​னார். இதுதொடர்​பான வழக்​கில் அவர் ஏழரை மாதம் சிறை தண்​டனை அனுப​வித்​தார். அப்​போது இருந்த சமாஜ்​வாதி ஆட்​சி​யில் யஷ்வீர் மீது தேசிய பாது​காப்பு சட்​ட​த்தின்கீ்ழ் வழக்குப் போடப்பட்​டது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *