அய்தராபாத், ஜூலை2 தெலங்கானாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பெரு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின (எஸ்.டி) மாணவர்களுக்கு 25% இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சர் அட்லூரி லக்ஷ்மண் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் வெளியிடப்பட் டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு, கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற அரசின் இலக்கிற்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரின் இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.