புதுடில்லி, ஜூலை 2- லட்சக் கணக்கான விவசாயிகளின் நலனுக்காக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள 33 சதவீத மானியம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
தேசிய அளவிலான கூட்டம்
ஒன்றிய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டில்லியில் தேசிய அளவிலான கூட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கிளைகள்
தமிழ்நாடு அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கூட்டுறவு நிறுவனங்களை கொண்டு செல்ல தீர்மானித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 579 கூட்டுறவு நிறுவனங்கள் புதியதாக உருவாக்கப்பட்டன. கூட்டுறவு நிறுவனம் இல்லாத கிராம பஞ்சாயத்துகளில் ஒரு கிளையை தொடங்குவது நிதி ரீதியாக சாத்தியமானதாக இருக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் ஏற்கெனவே 8 லட்சம் டன் சேமிப்புக் கிடங்கு வசதியை கொண்டுள்ளது. மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் 22.12 லட்சம் டன்னும், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கழகத்திடம் 7.71 லட்சம் டன் சேமிப்பு வசதியும் உள்ளது.
33 சதவீத மானியம்…
ஒன்றிய கூட்டுறவு அமைச்சகத்தின் முக்கிய திட்டமான உலகின் மிகப் பெரிய சேமிப்புக் கிடங்கு திட்டத்தில் 33 சதவீத மானியத்தை நிறுத்தி வைத்து, வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் 3 சதவீத வட்டி மானியத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சமீபத்திய நபார்டு வங்கியின் சுற்றறிக்கை இந்த புதிய முயற்சியினை முன்னெடுத்து செல்வதற்கு ஒரு தடை கல்லாக அமைய கூடும்.
உற்பத்தி அடமான கடனை பெற்று தங்கள் உற்பத்திக்கு நியாயமான விலையை பெற கூட்டுறவு நிறுவனங்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் நலனுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 33 சதவீத மானிய கூறு மீட்டெடுக்கப்பட வேண்டும். கோர் பேங்கிங் முறையில் தீர்வுகள் ” காணப்பட வேண்டும்
விவசாயக் கடன்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் அனைத்து வணிகங்களும் ஒரே மென்பொருளால் கிடைத்திட வகை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் வட்டியில்லா கடன் விவசாய கடன் (கே. சி.சி.) வழங்குகிறது.
வட்டி மானியமாக ஒன்றிய அரசு 3 சதவீதமும், தமிழ்நாடு அரசு 4 சதவீதமும் வழங்குகிறது. நிதியளவு குறைக்கப்படும்போது கூட்டுறவு நிறுவனங்கள் கூடுதல் வட்டி விகிதத்தில் கே.சி.சி. கடன்கள் வழங்குவதால் நட்டமடைகின்றன.
எனவே மாநிலத்தில்
கே.சி.சி. போர்ட் ஃபோலியோவில் 33 குறைந்தப்பட்சம் 50 சதவீத தொகையை செலுத்தி சலுகை மறுநிதி தலைப்பின் கீழ் வழங்க நபார்டு வங்கிக்கு உத்தரவிட வேண்டும்.எனவே கூட்டுறவை வலுப்படுத்தும் உறுதியான நடவடிக்கையை முன்னெடுத்து செல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.