சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 1850 ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10ஆவது தேர்ச்சி, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: ஜூலை 19, 2025.
பணியிட விவரங்கள் மற்றும் ஊதியம்
கனரக வாகன தொழிற்சாலை (HVF) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு 1850 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.21,000/- ஊதியம் வழங்கப்படும். இது ஒரு ஒன்றிய அரசுப் பணி என்பதால், ஊதியத்துடன் அரசு சார்ந்த சலுகைகளும் கிடைக்கும்.
முக்கிய தகுதிகள்
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட அய்டிஅய் சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்த வரை, 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி, SC/ST, OBC, PwBD பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க, பெண்கள், SC, ST, மேனாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. மற்றவர்கள் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள், வடிகட்டுதல் முறை (Short Listing) மற்றும் துறையறிவுத் தேர்வு (Trade Test) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த இரண்டு நிலைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கடைசி நாள்
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள் ஜூலை 19, 2025 ஆகும். இந்த தேதிக்குள் விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் https://oftr.formflix.org/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.