புதுடில்லி, ஜூலை 1 கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றதில் இருந்து அரசமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி பேசி வருகிறார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு நடைமுறையை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். அமல்படுத்தியுள்ளார்
பதிவாளர், சீனியர் தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர் உள்ளிட்ட பணி யிடங்களில் பட்டியலின பிரிவினருக்கு 15 சதவிகிதமும், பழங்குடியினர் பிரிவினருக்கு 7.5 சதவிகிதமும் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.