இதுதான் பி.ஜே.பி. ஆட்சி! அய்.ஏ.எஸ். அதிகாரியைத் தாக்கி, காரில் கடத்திச் சென்றனர்!

viduthalai
2 Min Read

புவனேசுவர், ஜூலை 1 ஒப்பந்தம் தர மறுத்த விவகாரத்தில் மாநகராட்சி வார்டு உறுப்பினரும், பாஜக பிரமுகருமான ஜெகநாத் பிரதான் என்பவரும், அவரது ஆட்களும் அலுவலகத்தில் புகுந்து  புவனேஷ்வர் மாநகராட்சி இணை ஆணையர் மீது தாக்குதல் நடத்தி காரில் கடத்திச் சென்றனர்.

குறை தீர்ப்பு முகாம்

ஒடிசா மாநில தலைநகர் புவனேஷ்வர் மாநகராட்சி ஆணையராக இருப்பவர் ரத்னாகர் சாஹூ. இவர் நேற்று (30.6.2025) மக்கள் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்.  அப்போது அங்கு ஜெகநாத் பிரதான் என்ற மாநராட்சி வார்டு உறுப்பினர் தனது அடியாட்களுடன் அங்கு வந்தார்.

வந்த உடனேயே மனுக்களைப் பெற்றுக்கொண்டு இருந்த இணை ஆணை யரை அடித்து கீழே தள்ளி முகத்தில் மிதித்தார். அவரது உடன் வந்த குண்டர்களும் அதிகாரிகளை உதைத்தனர். பின்னர் அந்த அதிகாரியை இழுத்துச்சென்று காரில் ஏற்றினர்.

ஜெக் பாய்” என்று அழைக்கப்படும் ஜெகந்நாத் பிரதான் மீது பல மோசடி வழக்குகள் உள்ளது

அவர் தன்னுடைய புவனேஷ்வர் மாநக ராட்சி வார்டு உறுப்பினராகவும் உள்ளார். இவர் மீது மோசடி வழக்கு உள்ளதால், இவரது அனைத்து நிறுவனமும் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன. இந்த நிலையில் இவர் மாநகராட்சிப் பணிகள் தொடர்பான ஓர் ஒப்பந்தம் தனக்கு வேண்டும் என்று விண்ணப்பித்தார். மேலும் அந்தப் பணிக்கு எந்த நிறுவனமும் விண்ணப்பிக்கக் கூடாது என்ற மிரட்டல் காரணமாக யாருமே விண்ணப்பிக்க முன்வரவில்லை.

ஒப்பந்தம் தர மறுப்பு!

இதனால் தனக்கு ஒப்பந்தம் வேண்டும் என்று ஆணையரிடம் கூறியிருந்தார். ஆனால் இணை ஆணையர் விதிமுறைப்படி தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டி யலில் உள்ளதால் அவரது நிறுவனத்திற்கு தரமுடியாது என்று கூறிவிட்டார்.

இதனை அடுத்து ெஜகநாத் பிரதான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்று கூறப்படும் குண்டர்கள் குறை தீர்ப்பு முகாமிலிருந்த அவரைத் தாக்கத் தொடங்கி னர்.  பின்னர் கீழே தள்ளி அவரது முகத்தில் மிதித்தனர்.

இந்தக் கொடூர நிகழ்வு வலைதளத்தில் பரவியதால், வேறு வழியின்றி பாஜக மாநகராட்சி  உறுப்பினர்கள் ஜீவன் ரவுத் மற்றும் பாஜக பிரமுகர் ரஷ்மி மஹபத்ரா, தேபாசிஷ் பிரதான் ஆகிய மூன்று பேரும் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்திய ஜெகநாத் பிரதானை காவல்துறையினர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *