பேராவூரணி, ஜூலை 1- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், கல்லூரணி காடு, தமிழ் மறவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர், சுயமரியாதைச் சுடரொளி புலவர் பூ..முருகையனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.06.2025 அன்று நண்பகல் 12:30 மணி அளவில் கல்லூரணி காடு ஜெயலட்சுமி முருகையன், அருள்குமரன் – ஜான்சிராணி இல்லத்தில் பட்டுக்கோட்டை கழக மாவட்ட கழக செயலாளர் மல்லிகை வை..சிதம்பரம் தலைமை யில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பட்டுக்கோட்டை மாவட்ட கழக காப்பாளர் அரு. நல்ல தம்பி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் சி.ஜெகநாதன் ஆகியோர் முன்னி லையிலும் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் ஒருங் கிணைப்புடனும் நடைபெற்றது.
நிகழ்வில் தர்மலிங்கம், காந்தி, ஜெய்சங்கர், சந்திரமோகன், ஜான் கே.டில்லி, அருமைக்கண்ணு, அருள் செல்வி, சற்குணம், அருள்மொழி, லோகநாயகி ஆகியோர் கலந்து கொண்டு புலவர் முருகையனின் நினைவுகளை நினைவுகூர்ந்தனர்.
நிகழ்ச்சியினை பட்டுக்கோட்டை நகர பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் குமணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கப்பட்டிருந்தது. விடுதலை ஓராண்டு சந்தா மாவட்ட கழக செயலாளர் வை. சிதம்பரத்தி டம் வழங்கப்பட்டது.
புலவர் முருகையன் குடும்ப சார்பாக பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளிப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.