கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 30.6.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நாடு முழுவதும் அடுத்த ஆண்டு 2026 ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை – வீடு வாரியாக – கணக்கெடுப்பு தொடங்கப்படும், ரிஜிஸ்டிரார் ஜெனரல் அறிவிப்பு.

* எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ஹிந்தி கட்டாயம் என்ற அரசின் அறிவிப்பை, பட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மகாராட்டிராவில் திரும்பப் பெற்றது.

தி இந்து:

* பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கல்வி முறையை ‘சீர்குலைத்துள்ளது’. பீகாரில் 2,637 பள்ளிகளில் ஒரே ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளார், ஒரு மாணவர் கூட சேராத 117 பள்ளிகள் உள்ளன, ஆனால் 544 ஆசிரியர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். பீகாரிலும் அதிக பள்ளி இடைநிற்றல் விகிதங்கள் உள்ளன: தொடக்கப்பள்ளி: 8.9%; உயர்நிலைப்பள்ளி: 25.9%; மற்றும் இடைநிலைப்பள்ளி: 25.63%,” என மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கண்டனம்.

* கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம். இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி, என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.

* மொழிக் கொள்கையில் சீரான தன்மையை தேசிய ஒற்றுமையுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது; . நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிவரும் பதில்களைக் கருத்தில் கொண்டு பாஜக தனது மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அது ஒற்றுமையின் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது இந்து பத்திரிக்கையின் தலையங்கம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘பாஜகவின் வலையில் விழாதீர்கள்’ பஸ்மந்தா இசுலாமியருக்கு சமாஜ்வாதி கட்சி எச்சரிக்கை: 2027 தேர்தலுக்கான பஸ்மந்தா முஸ்லிம் பிரச்சாரத்தை சமாஜ்வாதி தொடங்குகிறது

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆபரேஷன் சிந்தூரில் விமானங்களை இந்தியா இழந்தது, இந்திய கடற்படை கேப்டன் சிவகுமார், இந்தோனேஷியாவில் பேச்சு; இந்த விவகாரத்தில் மோடி அரசு நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறது: காங்கிரஸ் கடும் தாக்கு

தி டெலிகிராப்:

* பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி: 50 பேர் படுகாயம். ஒடிசா அரசின் தவறான அணுகுமுறைக்கு ராகுல், கார்கே கண்டனம்.

. குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *