பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்பு ஒழிப்பு!

2 Min Read

இதுதான் மோடி ஆட்சியின் லட்சணமா?  ராகுல்காந்தி கடும் தாக்கு!

அரசியல்

புதுடில்லி, ஜூன் 19- பிரதமர் மோடியின் அரசாங்கம், பொதுத் துறை நிறுவனங்களில் இரண்டு லட்சம் வேலைகளை ஒழித்துக் கட்டி, ஒப்பந்த வேலைகளை அதி கரித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து (18.6.2023) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட் டுள்ள ராகுல் காந்தி:

பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்ததோடு, இந்திய இளை ஞர்களின் வேலை வாய்ப்புக் கனவாகவும் இருந்தது. ஆனால், இன்று இவை அரசாங் கத்தின் முன்னுரிமை அல்ல.

நாட்டின் பொதுத்துறை நிறுவ னங்களில் 2014ஆம் ஆண்டில் 16.9 லட்சமாக இருந்த வேலைவாய்ப்பு 2022இல் 14.6 லட்சமாக குறைந் துள்ளது. வளர்ந்து கொண்டி ருக்கும் நாட்டில் வேலை வாய்ப்பு கள் குறையுமா? பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1,81,127 பேர் வேலை இழந்துள்ளனர். SAIL நிறுவனத்தில் 61,928 பேர், MTNLஇல் 34,997 பேர், 

SECL இல் 29,140 பேர், FCI இல் 28,063 மற்றும் ஓஎன்ஜிசியில் 21,120 பேர் வேலை இழந்துள்ளனர்.

ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்று பொய் வாக்குறுதி அளித்தவர்கள், வேலைகளை அதி கரிப்பதற்குப் பதிலாக, 

2 லட்சத்துக்கும் அதிகமானோரை வேலையை விட்டு நீக்கியுள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நிறு வனங்களில் ஒப்பந்த ஆட்சேர்ப்பு கிட்ட த்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒப் பந்த ஊழியர்களை அதிகரிப்பது அரச மைப்புச் சட்டத்தின் இட ஒதுக்கீட்டு உரிமை யைப் பறிப்பதாக ஆகுமல்லவா? அல்லது இந்த நிறுவனங்களை தனியார் மயமாக்கும் சதியா?

தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி, பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து அரசு வேலைகள் ஒழிப்பு. என்ன வகையான நீடித்த தன்மை இது?

இது உண்மையிலேயே ‘அமிர்த காலம்’ என்றால் ஏன் இப்படி வேலைகள் காணாமல் போகின் றன? ஒருசில ‘க்ரோனி கேபிடலிச’ நண்பர்களின் நலனுக்காக லட்சக் கணக்கான இளைஞர்களின் நம் பிக்கை நசுக்கப்படுவதால், இந்த அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கிறது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் சரியான சூழலையும், அரசாங்கத்தின் ஆதர வையும் பெற்றால், அவற்றால் பொருளாதாரம் மற் றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். பொதுத்துறை நிறுவனங் கள் நாட்டின் சொத்து, அவை இந்தியாவின் முன்னேற்றப் பாதையை வலுப்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *