ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குச் சொந்தமான பெண் குதிரையை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி.. காவல்துறையினரிடம் சமரசம் பேசிய மாவட்ட பாஜக தலைவர்கள்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குச் சொந்தமான குதிரைலாயத்தில் கட்டப்பட்ட பெண் குதிரையை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்படாமல் விடுவிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.க்கு சொந்தமான குதிரை லாயம்
பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அருகில் உள்ள அந்த அமைப்பிற்குச் சொந்தமான குதிரை லாயம் உள்ளது. இங்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் அவர்கள் சிபாரிசு செய்யும் நபர்களுக்கும் குதிரை ஏற்றப் பயிற்சி நடக்கும்.
குதிரை ஏற்றம் செய்பவர்
இங்கு குதிரை ஏற்றப் பயிற்சி பெற்றுவரும் பாஜக பிரமுகர் சோட்டியா சுந்தர் என்பவர் 21 ஆம் தேதி இரவு நேரத்தில் இந்தப் பயிற்சி மய்யத்திற்குள் ஏறி குதித்து குதிரை லாயத்தில் கட்டப்பட்டிருந்த பெண் குதிரை ஒன்றை தேர்வு செய்து அதோடு பாலியல் ரீதியில் உறவுகொண்டார்.
காலை பராமரிப்புப் பணிகளின் ஈடுபட்ட நபர்கள் கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது குதிரை பயிற்சி மய்யத்தின் சுற்றுச்சுவர் ஏறி குதித்த நபர் பெண் குதிரையோடு நடந்துகொண்ட இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
பா.ஜ.க. நிருவாகி
அவர் பாஜகவின் முக்கிய பிரமுகர் என்பதால் முதலில் தயங்கினார்கள். காவல் நிலையத்தில் குதிரைப் பயிற்சி மய்யத் தலைமை மேலாளர் புகார் அளித்தார் .
அதன் பெயரில் பாஜக நிர்வாகி சோட்டியாவைக் கைது செய்ய முயற்சி செய்தனர். அதற்கு அவர் “என்னைக் கைது செய்ய இயலாது; அப்படி கைது செய்தால் பல உண்மைகள் நான் சொல்ல வேண்டி வரும்” என்று காவல்துறையினரை மிரட்டி உள்ளார்.
இது குறித்து பாஜக மாவட்டத் தலைவரிடம் காவல்துறையினர் சோட்டியா கூறியதைத் தெரிவித்தனர். பத்து நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட பாஜக நிர்வாகிகள் காவல்துறையினரிடம் பேசிச் சமரசம் செய்த பிறகு புகார் எதுவும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.