மதுரை சோலையழகுபுரம் தெருமுனைக்கூட்டம்

2 Min Read

அரசியல்

மதுரை, ஜூன் 19- தமிழர் தலைவர் ஆசிரியர் அனைத்து மாவட்டங் களிலும் பிரச்சாரக்கூட்டங்களை நடத்த அறிவுறுத்தியதின் படி மதுரை சோலையழகுபுரத்தில் 15.6.2023) அன்று மாலை 6 மணிக்கு வாஞ்சிநாதன் தெருவில்   வைக்கம் போராட்டம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தெரு முனைக் கூட்டமாக   நடைபெற்றது. பெரியார் பெருந்தொண்டர்  சே. முனியசாமி தலைமையேற்று உரை யாற்றினார்.அனைவரையும் வர வேற்று பெரி.காளியப்பன்  உரை யாற்றினார்.

திராவிட இயக்க 

கட்சிகளில்…

தெருமுனைக்கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் சுப.முருகானந்தம் வைக்கம் போராட்டம், அதன் நிகழ்வுகள், தந்தை பெரியாரின் பங் களிப்பு போன்றவற்றை விளக்கிப் பேசினார். தி.மு.க.வழக்குரைஞர் இராம.வைரமுத்து இன்றைய திராவிட மாடல் ஆட்சி பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனைகள் பற்றியும், ஒன்றிய அரசின் சூழ்ச்சியான செயல்பாடுகள் பற்றியும் விளக்கி உரையாற்றினார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா. நேரு, 1912இல் டாக்டர் நடேசனார் ஆரம்பித்த பார்ப்பனரல்லாதவர்க் கான உணவு விடுதி பற்றியும், நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்க ஆட்சிகளில் கல்விக்காக இயற்றப் பட்ட சட்டங்கள், வசதிகள் பற்றி யும், திராவிட இயக்கம் எல்லோரும் படிக்கவேண்டும் என்று பாடுபடு வது குறித்தும், ஆர்.எஸ்,எஸ். சனா தனம் சூத்திரர்கள், பஞ்சமர்கள் படிக்கக்கூடாது என்று சொல்வது பற்றியும்  விளக்கிப் பேசினார்.  

தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை  வே.செல்வம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முன் னெடுப்புகள் பற்றியும்,நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்படி ஆணையிட்டது பற்றியும்,சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள பகுதி பொறுப் பாளர்களைப் பாராட்டியும் உரை யாற்றினார். 

நீதிக்கட்சி

இவர்களின்  உரைக்குப் பின் கழகச் சொற்பொழிவாளர்  தஞ்சை பெரியார் செல்வம் உரையாற்றி னார். அவர் தனது உரையில் நீதிக் கட்சி தொடங்கி தொடரும் “திராவிட மாடல்” ஆட்சி பற்றியும், முத் தமிழறிஞர் கலைஞர் பல்வேறு சிறப் புகள் பற்றியும்,வைக்கம் போராட் டம் எப்படி எல்லாம் வரலாற்று அடிப்படையில் முக்கியமானது என்பதுபற்றியும், பல்வேறு இலக் கியச் சிறப்பு உடைய தமிழ் ஏன் ஒன்றிய அரசால் ஒதுக்கப்படுகிறது, இந்திக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது பற்றியும் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் பணியாற்ற இளைஞர்களே, பெண் களே வாருங்கள், வாருங்கள் என அழைப்பு விடுத்தும் சிறப்பாக  உரையாற்றினார். கூட்டத்தில் மதுரை மாநகர் புறநகர் பகுதியில் இருந்து திரளான தோழர்கள் வருகை தந்தனர்.  மேலும் வீடுக ளுக்குள் இருப்பவர்களும், ஆங் காங்கே மக்கள் நின்று கேட்கும் வண்ணமும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணைச்செயலா ளர் ஜெ.பாலா,பெரியார் பெருந்தொண்டர் புதூர் பாக்கியம், மகளிரணி தலைவர் பாக்யலட்சுமி, ஒன்றிய தலைவர் பெரியசாமி, நா. முருகேசன், மோதிலால், கேசவன், அழகுப் பாண்டி,மாவட்ட அமைப் பாளர் இரா.திருப்பதி,செல்லூர் தோழர்கள் ந.இராஜேந்திரன், கோ.கு.கணேசன், ராஜசேகர், இளைஞரணி தலைவர்  க.சிவா, செயலாளர் பேக்கரி கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் பொ.பவுன்ராஜ்,அண்ணா நகர் தனுஷ் கோடி, ஆட்டோ தங்கராஜ், அங்க முத்து, இளைஞர் அணி அமைப் பாளர் வேல்துரை, விரகனூர் கணேசன், முரளி, தேன்மொழி, செல் லத்துரை, ரமேஷ், விராட்டிபத்து சுப்பையா,  இராதா, மாரிமுத்து, கதி ரேசன், சண்முக சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *