சீனாவின் யுனான் மாகாணத்தில் வவ்வால் களிடம் இருந்து 20 பயங்கரமான புதிய வைரஸ்கள் பரவி வரும் அதிர்ச்சி தகவல் வெளி யாகியுள்ளது. அதில் நிபா மற்றும் ஹென்ட்ரா வைரஸ்களும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ்கள் விரைவில் மனிதர்களுக்கு பரவும் அபாயமும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். 142 வவ்வால்களின் சிறு நீரகத்தை 4 ஆண்டுகளாக ஆய்வு செய்ததில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது.