புதுடில்லி, ஜூன் 26– கடந்த 11 ஆண்டு களாக இந்திய ஜனநாயகத்தின் மீது அய்ந்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நிகழ்ந்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் மாநிலங்களைக் கைப்பற்றி சட்டம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ஊடகம் என அனைத்தும் ஒரு தனிப்பட்ட அமைப்பின் கட்டுப்பாட்டில் சென்று விட்டதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி யுள்ளார்.
பெரும்பாலான ஊடகங்கள் தெளி வாக, அரசு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், மக்கள் உண்மையை அறிய முடியாத நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அமைப்புசார் நிதி வளங்கள், சில குறிப்பிட்ட சக்திகளுக்கு மட்டுமே சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உஃபா, பிஎம்எல்ஏ போன்ற கடுமையான சட்டங்கள், பொதுமக்கள், எதிர்க்கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கல்வி, பண்பாடு, வரலாறு இவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பகுத்தறிவை அழிக்க முயற்சி நடப்பதாகவும், இந்திய ஜனநாயகம் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இது அறி விக்கப்படாத அவசரநிலை என்றும் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.