மேனாள் இந்தியப் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் 95-ஆவது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் ஆ. வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். (சென்னை, 25.6.2025)