சென்னை, ஜூன் 26 தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டி யின்றி மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது. இந்த சூழலில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
அரசு பணிகளில் பதவி உயர்வின்போது, பணியிட மாறுதலின்போது மாற்றுத்திறனாளி களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்படும். அரசால் கண்டறியப்பட்ட பதவிகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படும். இதில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சதவீதம், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சதவீதம், பெருமூளை வாதம், தசைநார் சிதைவு, அமில திரவம் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சதவீதம், ஆட்டிம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சதவீதம், அனைத்து மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு ஒரு சதவீதம் என மொத்தம் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.