பெங்களூரு, ஜூன்.26 கருநாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருவதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதையடுத்து நேற்று (25.6.2025) கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினா டிக்கு 36 ஆயிரம் கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியும் உபரிநீர் திறக்கப்பட்டது. திருமகூடலு சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து தமிழ்நாடு நோக்கி காவிரியில் பாய்ந்தோடி வருகிறது. அதன்படி நேற்றைய நிலவரப் படி வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி நீர் நோக்கி வருகிறது. இதனால் நஞ்சன்கூடு, டி.நரசிப்புரா, கொள்ளேகால் பகுதிகளி லும் காவிரி கரையோர கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக சிறீரங்கப்பட்டணா, ஹலகூர் ஆகிய பகுதிகளில் சுற்றுலா தலங்களை மூட உத்தரவிடப்பட்டது.