பாட்னா, ஜூன் 26 ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியின் நிறுவனரான லாலு பிரசாத் (77) அக்கட்சியின் தேசியத் தலைவராக 24.6.2025 மீண்டும் தோ்வு செய்யப்பட்டார்.
ஒரு மனதாகத் தேர்வு
தலைவா் பதவிக்கான தோ்தலில் லாலுவைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவா் ஒருமனதாகத் தோ்வானார்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஆா்ஜேடி தொண்டா்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த தலைவா் தோ்வு நடைபெற்றுள்ளது. புதிய தலைவா் தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பு ஜூலை 5-ஆம் தேதி கட்சியின் தேசியக் குழு கூட்டத்தில் வெளியாகும் என்று தோ்தலை நடத்தும் அதிகாரியாக செயல்பட்ட மூத்த தலைவா் ராமச்சந்திர புா்பே தெரிவித்தார்.
ஒன்றிய பா.ஜ. அரசின் ஜாதி வெறி!
பேராசிரியர் ஜவாஹிருல்லா
சென்னை, ஜூன் 26 மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2014-2015 முதல் 2024-2025 வரையிலான 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழியைப் பரப்ப ரூ.2532.59 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய 5 செம்மொழிகளுக்குச் சேர்த்து ஒதுக்கப்பட்ட ரூ.147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம்.
ஆனால் மற்ற அய்ந்து செம்மொழிகளுக்கு சராசரி ஆண்டு நிதி ரூ.13.41 கோடி மட்டுமே ஒன்றிய பாஜ அரசு ஒதுக்கி தனது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. அமித்ஷா இந்தியாவின் தலைசிறந்த மொழி தமிழ் என்று பேசியது வெறும் பசப்பு வார்த்தைகள் மட்டுமே.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.