கல்பாக்கம், ஜூன் 25 செங்கல்பட்டு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 22062025 அன்று மாலை 6.00 மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள மாவட்டத் காப்பாளர் பக்தவச்சலம் இல்லத்தில் மாவட்டத் காப்பாளர் பக்தவச்சலம் தலைமையில் மாவட்ட துணை தலைவர் செ.சாலமனின் வரவேற்பு உரையுடன், மாவட்ட தலைவர் அ.செம்பியன் கருத்துரையுடன் மிக எழுச்சியாக நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
செங்கல்பட்டு மாவட் டம் ,கல்பாக்கத்தில் கழகப் பிரச்சார கூட்டத்தை திராவிடர் கழக துணை பொது செயலாளர் சே.மெ.மதிவதனியை அழைத்து ஜூலை மாதம் 9ஆம் தேதி அன்று எழுச்சி யாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட் டம் கல்பாக்கத்தில் புதிய கிளையை அமைப்பது
விடுதலை, உண்மை ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பது
அண்மையில் மறை வுற்ற செங்கல்பட்டு நகர தலைவர் கலியப்பேட்டை தமிழ்மணிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது
கல்பாக்கத்தில் நடைபெறும் கழகப் பிரச் சார கூட்ட மேடையை கல்பாக்கம் அய்வர் வழி வேம்பையன் பெயரில் அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவு கலைத் துறை மாநில தலைவர் மு.கலைவாணன், மாவட்ட செயலாளர் ம.நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர்கள் அ.பா.கருணாகரன், பூ.சுந்தரம்,
மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மு.அருண்குமார், பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் சே.சகாயராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் மு.பிச்சை முத்து, பகுத்தறிவாளர் கழக மறைமலைநகர் நகர அமைப்பாளர் வி.வசந்தன், மறைமலைநகர் ஏழுமலை, கல்பாக்கம் சேகர் உள் ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை எடுத்து ரைத்தனர், தோழர் செல்வராஜ் அவர்கள் நன்றி உரையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.