‘‘பூரி ஜெகநாதரை தரிசிக்கவே அமெரிக்க அதிபரின் அழைப்பை நிராகரித்ததாக’’ கூறிய மோடி குரோசியா, பீகார் எல்லாம் சென்றுவிட்டுதான் ஒடிசா வந்தார்.
மோடி சைப்பரஸ், கனடா மற்றும் குரோசியா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
ஜி7 மாநாட்டிலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதியிலேயே திரும்பிவிட்டார். இந்த நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் பேசிய மோடி டிரம்பிடம் நான் ெஜகநாதரை தரிக்கச் செல்வதால் அமெரிக்கா வரமுடியாது என்று கூறியதாக பேசியுள்ளார். அப்படி என்றால், கனடாவில் இருந்து நேராக ஒடிசா மாநிலத்தில் இறங்கி பூரி ஜெகநாதர் கோவிலுக்கு வந்திருக்கவேண்டும்
ஆனால், மோடி கனடாவில் இருந்து குரோசியா சென்று அங்கு ஏற்கெனவே செட் அப் செய்த ஆள்கள் ‘மோடி மோடி மோடி’ என்று கூச்சலிட, அந்தக் கூட்டத்தின் ஊடாக நடந்துசென்று, அந்நாட்டின் அதிபர் சோரன் மிலனொவ்வை சந்தித்தார்; அதன் பிறகு அங்கு பேசிய மோடி ‘‘அய்ரோப்பாவாக இருந்தாலும் சரி, ஆசியாவாக இருந்தாலும் சரி, பிரச்சினைகளை போர்க்களம் மூலம் தீர்க்க முடியாது. எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கும் மரியாதை அவசியம். ஹிந்தி மொழியில் எனது கருத்துகளை இங்கு முன்வைப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றார்,
அதன் பிறகு டில்லி வந்த அவர் ஓய்வெடுத்துவிட்டு, பீகார் சென்றார். பீகார் மாநிலம் சிவானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பின்னர்தான் ஒடிசா வந்தார்.
அதாவது அமெரிக்க அதிபருக்கு ஜெகநாதரை சந்திக்கப் போவதால் அமெரிக்காவரமுடியாது என்று கூறிய மோடி, குரோசியா சென்று அங்கிருந்து டில்லி திரும்பி, பீகார் சென்று பிறகுதான் ஒடிசா வந்துள்ளார்.
ஒடிசா மக்கள், மோடியின் இந்தப் பேச்சையும் கேட்டு சகித்துகொள்ளவேண்டும் என்ற நிலையில் உள்ளனர் – அந்தோ பரிதாபம்!