போபால், நவ. 12 – காங் கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் சத்னாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண் டார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘‘மத்திய பிர தேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், இதர பிற்படுத்தப்பட் டோர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என் பதை தெரிந்து கொள்வ தற்கு முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் படும். இது எக்ஸ்ரே போன்றது.
இது மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட் டோர் எண்ணிக்கையை பிரதிபலிக்கும். அதற் கேற்ப அவர்களது நல னுக்காக கொள்கைகள் வடிவமைக்கப்படும்.ஜாதிவாரி கணக்கெடுப் பானது மக்களின் புரட்சி கரமான மற்றும் வாழ்க் கையை மாற்றும் நடவ டிக்கையாகும். காங்கிரஸ் தலைமையில் ஒன்றிய அரசு அமைந்தால் தேசிய அளவில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும்” என்றார்.