செய்திச் சுருக்கம்

2 Min Read

ரூ.25,000 உதவித் தொகை ஜூலை 2-க்குள் விண்ணப்பிக்கலாம்!

‘நான் முதல்வன்’ திட்ட ஊக்கத்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டு யுபிஎஸ்சி (UPSC) முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், முதன்மை தேர்வு பயிற்சிக்கு 25,000 உதவித் தொகை பெற, ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கு https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/ என்ற இணையதளம் வழியே, ஜூலை 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

ஜூலை 1 முதல் பான் கார்டு பெற இது கட்டாயம்!

ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. பயனர்களின் அடையாள சரிபார்ப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறையில், விண்ணப்பதாரரின் பெயர், பிறப்பு சான்றிதழ் (அ) பிற அடையாளச் சான்றிதழ் இருந்தாலே பான் கார்டு பெற போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது

மக்களே
கவனமாக இருங்கள்

சமையல் எரிவாயு உருளை குழா கசிந்து எரிவாயு, மொத்தமும் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அது அடங்கியதுமே, சிலிண்டரை இருவர் எடுக்க வந்தனர். ஆனால், சட்டென கிச்சனில் இருந்து வெடி விபத்து ஏற்பட்டது. கதவுகளும், ஜன்னல்களும் திறந்து இருந்ததால், இருவரும் நல்வாய்ப்பாக தப்பித்து விட்டனர். எரிவாயு கசிவால், வெடிப்பு எவ்வாறு பற்றும் என கணிப்பது கடினம் என்பதால், 10 நிமிடங்கள் வரையாவது காத்திருக்க வேண்டும்.

15 ஆண்டிற்குள்
இவ்வளவு விலை ஏறிவிட்டதா?

நாட்டில் விலைவாசி எவ்வளவு வேகமாக உயர்கிறது தெரியுமா? 2010இல் அத்தியாவசிய பொருள்களின் விலையுடன், 2025 விலையை ஒப்பிட்டு சமூக ஊடகத்தில் வரும் பட்டியலை பாருங்கள்: பெட்ரோல் – ரூ.110 (2010இல் ரூ.51), பால் – ரூ.65 (ரூ.24), திரையரங்க கட்டணம் – ரூ.350 (ரூ.85).  பள்ளிக் கட்டணம் – ரூ.1.5 லட்சம் (ரூ.30,000), எரிவாயு உருளை – ரூ.900 (ரூ.700), இணையம் – ரூ.800 (ரூ.299).

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *