கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 24.6.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை  சேர்ந்த தாய் மட்டும் வளா்க்கும் குழந்தைக்கு ஓபிசி சான்றிதழ் வழங்குவதற்கு விதிமுறைகளில் திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு முக்கியமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நான்கு மாநிலங்களில் நடைபெற்ற அய்ந்து இடைத் தேர்தல்களில், குஜராத்தில் பாஜக ஒரு தொகுதியில் தோல்வி. ஒரு தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி, கேரளாவில் காங்கிரஸ் வெற்றி. மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி வெற்றி.

தி இந்து:

* நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கால்நடை கடத்தல் குற்றச்சாட்டில் இரண்டு தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் முழங்காலில் நடக்கவும், புல் சாப்பிடவும், அழுக்கு நீரை குடிக்கவும் கட்டாயப் படுத்தப்பட்டனர், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தல்.

– குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *