பள்ளிக் கல்வி அமைச்சர் பார்வைக்கும் – உரிய நடவடிக்கைக்கும்

2 Min Read

நான் வசிக்கும் (கடையநல்லூர், கிருஷ்ண புரம் மேற்கு மலப்பாட்டைதெரு) பகுதியில் 2,3,4,5,6 மற்றும் 7 ஆகிய வார்டுகள் உள்ளன. இதில் வசிக்கும் முதியோர், பெண்கள் மற்றும் உடல் நலிவுற்றோர்  நடைப்பயிற்சி செய்வதற்கு உண்டான ஒரே இடமாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மட்டுமே இருந்து வருகிறது.

அதில் தேர்வு நடைபெறும் போது மாதக்கணக்கில் உள்ளே அனுமதிப்பதில்லை ஆண்டுக்கு மூன்று மாதங்கள் உடற்பயிற்சிக்குத் மற்றும் நடைப்பயிற்சி தடை செய்யப்படுகிறது.

மேலும் ஆண்டுக்கு ஒருமுறை விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போதும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்கு அனுமதிப்பதில்லை. வாயிற்கதவு பூட்டப்படுகிறது.

காவல்துறையின் பயிற்சி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் போதும் பொதுமக்கள் மற்றும் பெண்களை நடைப்பயிற்சி உடற்பயிற்சிக்கு அனுமதிப்பதில்லை.

தேர்தல் காலங்களிலும்  மாதக்கணக்கில் உடற்பயிற்சி/நடைப்பயிற்சிக்கு அனுமதிப்ப தில்லை.

மேற்சொன்ன காரியங்கள் நடைபெறும் போதும் எங்களை உடற்பயிற்சி, நடைப் பயிற்சிக்கு அனுமதியுங்கள் எனக் கேட்பதும் பள்ளி நிர்வாகத்திற்கு இடையூறு செய்வதாகும் என்பது எங்களுக்கும் புரிகிறது.

இருந்தாலும் அரசு நினைத்தால் பள்ளிக்கூட நிர்வாகத்திற்கும், பள்ளியில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளுக்கும் இடையூறு இல்லாமலும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செல்வோருக்கு  மேற்கண்ட பயிற்சிகள் தடையில்லாமல் நடைபெறச் செய்ய நாங்கள் விடுக்கும்ஒரு வேண்டுகோள்.

குறிப்பு:- எத்தனையோ ரயில்வே அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால் பகுத்தறிவை ஏற்றுக்கொண்ட மேனாள் பீகார் மாநில முதல்வர் மானமிகு லாலு அவர்கள் இரயில்வே அமைச்சரான போது இந்தியாவே மெச்சும் அளவுக்கு இரயில்வே நிர்வாகம் இலாபத்தில் காட்டியும் AC கோச் காலியாக இருந்தால் பதிவு செய்தோருக்கு அந்த இடத்தை ஒதுக்கீடு செய்ய உத்தவிட்டும் நடைமுறைப்படுத்தி காட்டினார் என்பது நினைவு கூறத்தக்கது.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கிட்டத்தட்ட ஆறு ஏக்கர் நிலப்பரப்பு உள்ள இடம். அந்த  பள்ளியின் சுற்றுச் சுவறுக்கும், கட்டடங்களுக்கும் இடைப்பட்ட இடம் 10 அடியில் இருந்து 15 அடி அகலத்தில் வீணாக பயனற்று கிடக்கிறது. அதை மட்டும் நடைப்பயிற்சி & உடற்பயிற்சிக்கு பயன்படுத்திட சுற்றுச்சுவர் இல்லாத இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்து பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு இடையூறு நீக்கியும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் ஆவன செய்தால் பயிற்சி செய்வோர்களின் ஆயுட்காலம் நீண்டு கொள்ளும். ஆகவே ஆவன செய்திட திராவிட மாடல் அரசுக்கு பரிந்துரைத்திட கனிவுடன் வேண்டுகிறேன்.

                                  தங்கள் உண்மையுள்ள

எஸ்.எம். ஷாஜஹான்

மேனாள் நகர மன்றத் துணைத் தலைவர், கிருஷ்ணாபுரம், கடையநல்லூர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *