வாசிங்டன், ஜூன் 22- அமெ ரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலையில், இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.இந்தப் பல்கலையில், 6,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் படிக்கின்றனர். பல்கலையின் மொத்த மாணவர்களில், இவர்கள், 27 சதவீதமாகும்.
வெளிநாட்டு மாணவர் சேர்க்கை தொடர்பாக பல்கலைக்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.அதை ஏற்க பல்கலை நிர்வாகம் மறுத்தது. இதையடுத்து, பல்கலைக்கான, 19,000கோடி ரூபாய் மானியத்தை நிறுத்தினார் டிரம்ப்.மாணவர் சேர்க்கை தொடர்பான அரசின் உத்தரவுக்கு எதிராக பல்கலை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த பாஸ்டனில் உள்ள மாவட்ட நீதிமன்றம், இந்த உத்தரவுகளை நிறுத்தி வைக்க உத்தர விட்டது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில், அடுத்த சில நாட்களில், மிகவும் சிறந்த ஒரு உடன்பாடு ஏற்படும் என்று, சமூக வலைதளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
ஹார்வர்டு விவகாரம் டிரம்ப் உத்தரவுக்கு தடை
Leave a Comment