நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலிய பெண் என்ற பெருமைக்குரிய படிகவியலாளரான ஆராய்ச்சி யாளர் அடாயோனத் அவர்களின் பிறந்தநாள் இன்று (22-06-1939) கூடுதல் தகவல் : இவர், மனிதனை தாக்கும் நோய் கிருமிகளிடம் இருந்து ரிபோசோம்களை ஆண்டி பயாடிக் மருந்துகள் எவ்வாறு பாதுகாக்கின்றன என 20 ஆண்டு காலகடுமையான ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்தார்.
உலக மழைக்காடுகள் நாள் இன்று (ஜூன் 22)
உலக மழைக்காடுகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மழைக்காடு நாள் முதன்முதலில் 2017-ஆம் ஆண்டு மழைக்காடுகள் கூட்டாண்மை என்ற அமைப்பால் கொண்டாடப்பட்டது. மழைக்காடுகளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தவும் உலக மழைக்காடுகள் நாளாக அனுசரிக்கப்படுகிறது.