உலகில் நினைத்து பார்க்க முடியாத அதிசயங்கள் அவ்வப்போது அரங்கேறி கொண்டிருக்கிறது. ஆம்! சைபீரியாவின் யகுசியா அருகே பணி அடுக்குகளின் இடையே உறைந்த நிலையில் இருந்த 300 புழுக்களை ரசிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் ஒரு புழு 32,000 ஆண்டுகள், மற்றொன்று 41,700 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் தெரியவந்துள்ளது. அவை இரண்டும் தற்போதும் உயிரோடு இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.