அய்தராபாத், நவ. 12– தெலங்கானா சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்றால் 6 மாதங்களுக்குள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
ஜாதிவாரி கணக் கெடுப்பு தெலங்கானா மாநிலத்தில் 119 இடங் களை கொண்ட சட்ட சபைக்கு வருகிற 30ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதை யொட்டி அங்கு தேசிய, மாநில கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தெலங் கானாவில் தாங்கள் ஆட் சிக்கு வந்தால் 6 மாதங் களுக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத் தப்படும் என்று மாநில காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் சிறுபான்மையினர் நலனுக்கான பட்ஜெட் தொகை ரூ.4,000 ஆயிரம் கோடியாக உயர்த்தப் படும் என்றும் உறுதியளிக் கப் பட்டுள்ளது. இது தொடர்பாக சிறுபான் மையினர் பிரகடனத்தை அக்கட்சி வெளியிட்டுள் ளது. அதில் கூறப்பட்டுள் ளதாவது:-
சிறுபான்மையினர் உள்பட அனைத்து பிற் படுத்தப்பட்ட வகுப்பின ருக்கும் வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் அரசு திட் டங்களில் நியாயமான இடஒதுக்கீடு உறுதி செய் யப்படும். ரூ.10 ஆயிரம் கவுரவ ஊதியம் அதோடு வேலைவாய்ப் பில்லாமல் இருக்கும் சிறுபான்மையின இளைஞர்கள் மற் றும் பெண்களுக்கு மானி யத்துடன் கடன் வழங்கு வதற்காக ஆண்டுதோ றும் ரூ.1,000 கோடி ஒதுக் கப்படும். ‘அப்துல் கலாம் தவுபா இ தலீம்’ திட்டத் தின் கீழ் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர் கள் மற்றும் பிற சிறு பான்மை இளைஞர்க ளுக்கு, எம்.பில், பி.எச்.டி படித்து முடித்ததும் ரூ.5 லட்சம் நிதி யுதவியாக வழங்கப்படும். இமாம் கள், காதீம்கள், பாதிரி யார்கள் மற்றும் கிரந்திஸ் கள் உள்ளிட்ட அனைத்து மதத்தை சேர்ந்த மத போதகர்களுக்கும் மாதாந்திர கவு ரவ ஊதிய மாக ரூ.10,000 முதல் 12,000 வரை வழங்கப் படும். சிறப்பு ஆள்சேர்ப்பு நடவடிக்கை மூலமாக உருது மொழிப்பாட ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள். தெலங்கானா சீக்கிய சிறு பான்மை நிதி கழகம் தொடங் கப்படும். வீடு இல்லாத சிறுபான் மையினருக்கு வீடுகட்ட ரூ.5 லட்சம் வழங்கப்படும். அதேபோல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த புது மண இணையர் ரூ.1.6 லட் சம் வழங்கப்படும். இவ் வாறு அந்தப் பிரகடனத் தில் கூறப்பட்டுள்ளது.