பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பாலியல் வன்முறைச் சம்பவங்களின் கூடாரமாக மாறிய ஒடிசா 3 நாளில் 3 பெண்கள் பாலியல் கொடுமை; 17 வயது சிறுமி படுகொலை

Viduthalai
3 Min Read

பாலசூர், ஜூன் 21 மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதி கரித்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம், உத்தராகண்ட் மற்றும் பாஜக கூட்டணி ஆளும் மகாராட்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் பாலியல் வன்முறைச் சம்பவங்களின் கூடாரங்க ளாக மாறியுள்ளன. இதன் வரிசையில் பாஜக முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ள ஒடிசா மாநிலமும் பெண்க ளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறி யுள்ளது. அங்கு சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ள நிலையில், கடந்த 3 நாட்களில் 3 பெண்கள் கும்பல் பாலியல் வன்கொடுமைச் சம்ப வங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதில் 17 வயது சிறுமி கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் 1 – : 20 வயது மாணவி

ஞாயிற்றுக்கிழமை அன்று (ஜூன் – 15) மாலை நேரத்தில் “ராஜா பண்டிகையை” முன்னி ட்டு தனியார் கல்லூரியில் இளங்கலை படிக்கும் மாணவி ஒருவர், தனது காதலனுடன் கஞ்சம் மாவட்டம் பிரசித்திப் பெற்ற கோபால்பூர் கடற் கரைக்குச் சென்றுள்ளார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் காதலன் மீது தாக்குதல் நடத்தி, 20 வயது மாணவியை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவி அளித்த புகாரின் பேரில் 17.6.2025 அன்று 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற வாளிகள் கைது செய்யப்பட்ட பின்பு தான், இந்த  கும்பல் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சம்பவம் 2 – : 17 வயது சிறுமி

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தின் ஹரி சந்தன்பூரில் 17 வயது சிறுமி திங்களன்று இரவு, வீட்டிற்கு அருகே உள்ள திறந்த வெளி கழிப்பிடத்திற்கு சென்றுள்ளார். செவ் வாய்க்கிழமை அதிகாலை வரை சிறுமியை காணவில்லை. சிறுமியின் பெற்றோர், உற வினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமி பற்றிய தகவல் கிடைக்கவில்லை. கடைசியாக 17.6.2025 அன்று காலை ஹரிசந்தன்பூருக்கு அருகே ஒரு மரத்தில் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடல் முழுவதும் இரத்தக் கறையுடன் காட்சி அளித்தது. கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஹரிசந்தன்பூர் பகுதி யில் பதற்றத்தைத் தூண்டிய இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்து, 2 பேரை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சம்பவம் 3 -: 31 வயது பெண்

மேற்கு வங்க எல்லையில் அமைந்துள்ள ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பரிபாடா பகுதியில் 31 வயது பெண் வீட்டிற்குள் தனியாக இருந்துள்ளார். கணவர், உறவினர்கள் அருகில் உள்ள நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை கடத்தி, வேறு இடத்திற்கு கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ள னர். இந்த சம்பவம் 16.6.2025 அன்று  நிகழ்ந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மூலம் 19.6.2025 அன்று தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  இந்நிலையில், இந்த கும்பல் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் பரிபாடா காவல் ஆய்வாளர் ஆதித்ய பிரசாத் ஜெனா கூறியுள்ளார். 3 கும்பல் பாலியல் சம்பவங்களும்  கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் நிகழ்ந்துள் ளன. ஆனால் புதன்கிழமை மற்றும் வியாழக் கிழமை அன்றே அடுத் தடுத்து செய்திகளாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆனாலும் 5 நாட்கள் இடைவெளியில் 3 கும்பல் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்த தால் ஒடிசா  மாநிலத்தில் பாஜக அர சுக்கு எதிராக கண்ட னங்கள் குவிந்து வருகின்றன.

கோபால்பூர் கடற்கரையில்
ஒரு காவலர்கூட இல்லையா?

20 வயது கல்லூரி மாணவி கும்பல்  பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட கோபால்பூர் கடற்கரை உலக பிரசித்திப் பெற்றது. மெரினா அளவிற்கு பிரபலமானது இல்லை என்றாலும், ஓரளவுக்கு சுற்றுலாப் பயணிகள் குவியும் இடம் ஆகும். இவ்வளவு பிரபலமான சுற்றுலாத்தலத்தில் ஒரு காவலரை கூட ஒடிசா பாஜக அரசு பாதுகாப்பு பணிக்கு அமர்த்தவில்லையா? பிரபலமான  சுற்றுலா தலமாக இருந்தும் எப்படி 20 வயது கல்லூரி  மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்? என பல்வேறு கேள்விகள் கிளம்பியுள்ளன.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *