சென்னை, ஜூன் 21- தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் சேர்க்கை முடிந் துள்ள நிலையில், 31 ஆயிரத்து 488 இடங்கள் காலியாக உள்ளது என உயர் கல்வித்துறை தெரிவித் துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 லட்சத்து 7ஆயிரத்து 299 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நடத்தப் பட்ட முதல் மற்றும் 2ஆம் சுற்றுக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து 2ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற்ற முடிந்த நிலையில் 31 ஆயிரத்து 488 காலியாக உள்ளன. தற்போது மாணவர்களை விட மாணவிகள் 12 ஆயிரத்து 569 பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
மேலும் 31,621 மாணவர்களும், 44,190 மாணவிகளும் சேர்ந் துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கல்லூரியிலும் சேர்வ தற்கு விண்ணப்பித்த மாணவர் களின் மதிப்பெண் தர வரிசை அடிப்படையில் காலியாக உள்ள இடங்களில் சேர்க்கைக்கு அழைக் கப்படுவார்கள்.
மேலும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 21,000 சேர்ந் துள்ளனர். இவர்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப் பட உள்ளது. இந்நிலையில் 22.6.2023ஆம் தேதி முதல் முதலா மாண்டு வகுப்புகள் துவக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் மே மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஷ்ஷ்ஷ்.tஸீரீணீsணீ.வீஸீ என்ற இணையதள முகவரி யில் மே 8 ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரையில் பதிவு செய் தனர்.
இணைய வழியில் விண்ணப் பிக்க முடியாத மாணவர்களுக்கு கல்லூரியில் உதவி மய்யங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக முதல் முறையாக தகவல் மய்யம் அமைக்கப்பட்டது.
இதில், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட் சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேர்வதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப் பட்டன. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டி யல் தயார் செய்து கல்லூரிகளுக்கு 25ஆம் தேதி அனுப்பி வைக்கப் பட்டது.
தமிழ் மொழி பட்டப்படிப்பு தமிழ் மொழியில் பயின்றவர்களுக் காக தனியாக தரவரிசை பட்டிய லும், ஆங்கில மொழி பட்டப் படிப்பு களுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப் பெண்களும், பிற இளநிலை பட்டப் படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங் களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டி யல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வர்களுக்கான கலந்தாய்வு 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல்முறையாக அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாணவர்கள் தங்களுக்கான இடங் களை தேர்வுச் செய்த பின்னர் வேறு கல்லூரியில் சேர்வதை தவிர்க்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் கல்லூரி கல்வி இயக்கு நரின் இணையதளத்தில் இருந்து அனுமதிக் கடிதம் பெற்ற பின்னர் தான் சேர்க்கை நடத்தப்பட்டது.
இந்தக் கலந்தாய்வின் மூலம் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்ந் துள்ளனர். அவர்களில் 15,034 மாண வர்கள், 25, 253 மாணவிகள். 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை யில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 10,918 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந் தாய்வு நடைபெற்றது.
முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 75 ,811 மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் மாணவர்கள் 31,621 பேரும், மாண விகள் 44,190 பேரும் சேர்ந்துள் ளனர்.
இதனைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில், கல்லூரி வாயிலாக மாண வர்கள் சேர்வதற்கு விண்ணப்பித்து அந்த கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர் களின் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் தொடர்ந்து அழைக் கப்பட்டு மூன்றாம் சுற்று கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.
கலந்தாய்வில் அனைத்து இடங் களும் முழுமையாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் விண்ணப்பித்த மாணவர் களுக்கு கூடுதலாக இடங்கள் தேவைப்பட்டால் கலைப் பிரிவில் உயர் கல்வித்துறை மாணவர்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் இடங் களை ஒதுக்கீடு செய்து அளிக்கும். கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி முதல் துவங்கும் என உயர் கல்வித்துறை அறிவித் துள்ளது.