திருவனந்தபுரம், ஜூன்.20- திருவனந்தபுரத் தில் ஆளுநர் மாளிகையில் நடந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சிவன் குட்டி வெளிநடப்பு செய்தார். அத்துடன் காவிகொடி ஏந்திய பாரதமாதா உருவப்படம் விழாவில் வைக்கப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டினார்.
பரிசளிப்பு விழா
கேரளாவை பொறுத்த வரை மாநில அரசும், ஆளுநரும் கடந்த சில ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடந்த விழாவில் விவசாய துறை அமைச்சர் பிரசாத் பங்கேற்றார். அப்போது காவிக் கொடியுடன் கூடிய பாரத மாதா படத்திற்கு ஆளுநர் மாலை அணிவித்து மரியாதைசெய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பிரசாத் விழாவை புறக்கணித்தார். ஆளுநரின் இந்த செயலை பல்வேறு கட்சியினரும் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஆளுநர் மாளிகையில் சாரண சாரணியர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள கேரள பொது கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. விழாவில் அமைச்சர் சிவன் குட்டி தேசிய கீதம் பாடப்பட்ட பின் தாமதமாக வந்து கலந்து கொண்டார்.
வெளிநடப்பு
இந்த நிலையில் பரி சளிப்பு தொடங்குவதற்கு முன்னதாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விழா மேடை யில் வைக்கப்பட்டு இருந்த காவி கொடி யுடன் கூடிய பாரத மாதா உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை கண் டித்து அமைச்சர் சிவன் குட்டி விழா நிகழ்ச்சிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் அமைச் சரின் செயலை கண்டித்து ஆளுநர் மாளிகை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விழாவில் தேசிய கீதம் பாடப்பட்ட பின் தாமதமாக வந்த அமைச்சர் சிவன் குட்டி, விழா நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே வெளிநடப்பு செய்து புறப்பட்டு சென்றார். இது தேசிய கீதத்தையும், மாநில ஆளுநரையும் அவமதிக்கும் செயலாகும். இதனை ஆளுநர் மாளிகை வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அகங்காரத்தின் உச்சம்
விழாவை புறக்கணித் தது குறித்து அமைச்சர் சிவன் குட்டி கூறும் போது, ‘நாட்டின் ஒரு மைப்பாட்டிற்கு எதிரான ஒரு படம் ஆளுநர் மாளி கையில் உள்ளது. நான் வெளிநடப்பு செய்தது ஆளுநருக்கு எதிரான செயல் அல்ல. ஆனால் ஆளுநரின் செயல் அகங் காரத்தின் உச்சம்’ என்றார்.